Trucks

டாடா ட்ரக்ஸ்: கமர்ஷியல் வாகனங்களில் தலை சிறந்து விளங்கும் மரபு

கமர்ஷியல் வாகனத் துறையில் மிகச்சிறந்தவற்றை வழங்கும் ஒரு வளமான பாரம்பரியத்தை டாடா ட்ரக் ஸில், நாங்கள் பெற்றுள்ளோம். தொடக்க காலத்திலிருந்தே புத்தாக்கங்கள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் இயக்கச் செயல்பாடுகளின் மையமாகத் திகழ்ந்தது எங்களின் முக்கிய பலங்களில் ஒன்று, தரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை நோக்கிய எங்களின் தொடர்ந்த இடைவிடாத முயற்சிகளே எங்களின் வலிமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் உரிமை உடைமை பயணங்கள் நெடுக ஒரு முழுமையான ஆதரவை பெறுவதை உறுதி செய்ய ஒரு பரந்த விரிவுபட்ட சேவை பிணையத்தை கொண்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். நாங்கள் ட்ரக் குகள் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஒரு உற்பத்தி நிறுவனம் மட்டுமல்ல அதற்கும் மேலாக உங்கள் வணிக வளர்ச்சியில் உங்களோடு இணைந்து செயல்படும் ஒரு கூட்டாளியாகவும் நாங்கள் விளங்குகிறோம். நிலைத்தன்மைக்கான எங்களின் அர்ப்பணிப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை உருவாக்கவும், உமிழ்வைக் குறைக்கவும் மற்றும் எங்கள் வாகனங்களின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தவும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

 

4,00,000

பிணைக்கப்பட்ட ட்ரக் குகள்

 

18,000+

உதிரிபாக சில்லறை விற்பனை நிலையங்கள்

 

160+

டாடா அசல் பாகங்கள் (TGP) விநியோக மையங்கள்

 

1,500

சேவை பணிமனைகள்

எங்கள் பிராண்டுகள்

Image
Tata Motors Prima
உங்கள் தொழுவத்தின் பெருமை
Image
Tata Signa
அழகுக்கு கூடுதல் செயல்திறனை வழங்குகிறது.
Image
Tata Ultra Range
மேம்பட்ட மதிப்பு
Image
ஆற்றல், உற்பத்தித் திறன் & இலாபகரமானது

உலகத் தரம் வாய்ந்த ட்ரக்குகள் தயாரிப்பு வரிசையின் பரிணாம வளர்ச்சி

Image

Evolution of the world class trucks range

1975

1975

டாடா 1210 செமி ஃபார்வர்ட் மாடல் இந்திய சாலைகளை ஆக்கிரமித்தது

Image

Evolution of the world class trucks range

1969

1969

டாடா பிராண்டின் கீழ் டெல்கோ நிறுவனம் செயல்படத் தொடங்கியது

Image

Evolution of the world class trucks range

1954

1954

முதல் முதலான TMB 312 ட்ரக் வர்த்தக கமர்ஷியல் வாகனம் சாலைகளில் பயனிக்கத் தொடங்கியது.

Image

Evolution of the world class trucks range

1948

1948

மார்ஷல் சன்ஸ் (UK) யுடனான கூட்டாண்மையில் ஸ்டீம் ரோட் ரோலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது

Image

Evolution of the world class trucks range

1945

1945

தொடர்வண்டிகள் மற்றும் இதர பொறியியல் தயாரிப்புக்களின் உற்பத்தியில் காலடி எடுத்து வைத்தது. .

பாராட்டுக்கள் 

டாடா மோட்டார்ஸ் ஈடு இணையில்லா வெளிப்பாடுகளை வழங்கி அனைத்து கணிசமான அளவில் பங்குதாரர்களுக்குமான மதிப்பை உருவாக்கி மேம்படுத்தி வரும் அதன் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அங்கீகாரத்தை பெற்று வருகிறது. நாம் தொடர்ந்து பெற்றுவரும் இத்தகைய இந்த பாராட்டுக்கள் நமது தாக்கத்தை மேலும் விரிவடையச் செய்வதற்கான மன எழுச்சியை நமக்கு வழங்குகிறது .

Image

ET நவ் 

Ultra T.7:  ஆண்டின் மிகச்சிறந்த LCV

2020

Image

ET நவ் 

LPT 407 FE: ஆண்டின் மிகச்சிறந்த LCV

2019

Image

ET நவ் 

Ultra 1412:  ஆண்டின் மிகச்சிறந்த CV

2019

தொழில்நுட்பம்

செயல்திறன், பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் டாடா ட்ரக் குகள்களில் உள்ளடங்கியுள்ளன. . பல்வேறு மாடல்கள் மற்றும் வேரியண்ட்டுகளுக்கிடையே தொழில்நுட்ப அம்சங்களில் குறிப்பிடத்தகுந்த மாறுபாடுகள் இருக்கும் என்றாலும், அவற்றுக்கிடையே காணப்படும் சில பொதுவான எடுத்துக்காட்டுகள் இங்கே:

டாடா மோட்டார்ஸ், ஃப்ளீட் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு, வாகனத்தின் செயல்திறனை கண்காணிக்கவும், இருப்பிடத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதற்கும் , எரிபொருள் செயல்திறன் பகுப்பாய்வை மேற்கொள்ளவும் மற்றும் தொலைதூரத்தில் இருந்தே லாஜிஸ்டிக் செயல்பாடுகளை நிர்வகிக்கவும், உதவும் வகையில் டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பத்தை அதன் ட்ரக் குகளில் ஒன்றிணைத்துள்ளது, வாகன வரிசைகளின் இயக்கச் செயல்பாடுகளை உகந்ததாகச் செய்ய தரவுகள் மற்றும் நுண்ணறிவுகளை நிகழ் நேரத்தில் வழங்கி உதவுகிறது.

Image

டாடா ட்ரக் குகள் எரிபொருள் செயல்திறனை மென் மேலும் அதிகரிக்க மேம்பட்ட இயந்திர மேலாண்மை அமைப்புகள், உகந்த மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய ஃப்யூயல் இஞ்செக்ஷன் அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களை செயல்படுத்துகின்றன. இந்த சிறப்பம்சங்கள் வாகனத்தின் மைலேஜ் திறனை மேம்படுத்தி உமிழ்வைக் குறைத்து இயக்கச் செலவுகளையும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தையும் பெருமளவு குறைக்க உதவுகின்றன.

Image

டாடா ட்ரக் குகள் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்ஸ் (ABS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களை வழங்கி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தி, பிரேக்கிங் செயல்திறனை சிறப்பாக்குகிறது, மற்றும் சவால் மிகுந்த கரடு முரடான நிலப்பகுதிகள் மற்றும் மோசமான வானிலைகளில் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக இருந்து உதவுகின்றன.

Image

ஒரு சில டாடா ட்ரக் மாடல்களில், ஓட்டுனர்கள் வாகனத்தை லாகவமாக செலுத்தவும் நிறுத்துமிடங்களில் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்தவும் உதவும் வகையில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர்வியூ கேமராக்கள் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் அடங்கியுள்ளன. இந்த தொழில்நுட்ப வசதிகள் விபத்து அபாயத்தைக் குறைக்கவும் வாகனத்தின் ஒட்டுமொத்த இயக்கச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன

Image

ஓட்டுனருக்கு ஒரு வசதியான மற்றும் பணிச்சூழமைவுக்குகந்த ஓட்டுனர் அறை வழங்கப்படுவதற்கு டாடா ட்ரக் ஸ் தீவிர கவனம் செலுத்துகிறது. இதில் அமைந்திருக்கும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் மல்டிமீடியா சிஸ்டம்கள் போன்ற அம்சங்கள் ஓட்டுனருக்கு சொகுசான பயணத்தை உறுதிப்படுத்தி நீண்ட தூர பயண களைப்பை குறைக்கிரைக்க உதவுகிறது.

Image

டாடா மோட்டார்ஸ், ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர கருவிகளோடுடனான தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்து உதவும் வகையில் தகவல் தொடர்பு தீர்வுகளை அதன் ட்ரக் குகளில் ஒன்றிணைத்துள்ளது. இந்த அம்சங்கள் வாகனத்தை லாவகமாக செலுத்த, பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க மற்றும் தகவல்தொடர்பு செயல்பாடுகளுக்கான அணுகலை வழங்கி ஓட்டுனர்களுக்கான தொடர்பிணைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துகிறது.

Image

சில டாடா ட்ரக் மாடல்கள் வாகனத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் பராமரிப்பு தேவை அல்லது சாத்தியக் கூறுள்ள பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கவும் குறைபாடு கண்டறியும் அமைப்புக்கள் தொலைதூர கண்காணிப்பு செயல் திறன்கள் வாகன மேலாளர்களுக்கு வாகனங்கள் குறித்த தேவையான முக்கிய தகவல்களை அணுகவும், பராமரிப்புத் திட்ட அட்டவணையை மேம்படுத்தவும் மற்றும் வாகனங்கள் செயல்படாமல் இருக்கும் கால அளவை குறைப்பதற்கும் உதவுகின்றன.

Image

நிலைத்தன்மை

பசுமையான எதிர்காலத்திற்கு நிலைத்தன்மையோடு கூடிய தீர்வுகளை நோக்கிய பயணம்

Image
நிலைத்தன்மையோடு கூடிய முன்னேற்றம்

டாடா மோட்டார்ஸ், CNG ட்ரக் குகள், LNG ட்ரக் குகள், எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரோ ட்ரக் குகள் உட்பட மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதிய நூதனமான மொபிலிட்டி தீர்வுகளுக்கான புத்தாக்கங்களை உருவாக்கி உற்பத்திசெய்து வருகிறது. குறைப்பதற்கான யுக்திகள், மற்றும் சுத்தமான மற்றும் பசுமையான சக்தி பயன்பாடு உள்ளிட்ட நிலைத்தன்மையோடுடனான புதிய உற்பத்தி நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

Image
கரிம உமிழ்வு அறவே இல்லாத நிலையை நோக்கிய செயல்பாடுகள்

செயல்திறனை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட, அதிக வலிமை கொண்ட ஆனால் எடை குறைவான மூலப்பொருட்களை பயன்படுத்தி, இலகுரக வாகனங்களின் வடிவமைப்புக் கொள்கைகளுக்கு நாங்கள் தலைமை தாங்கி வழிநடத்துகிறோம். This approach helps us improve fuel efficiency and reduce the carbon footprint by requiring less energy for operation இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதன் காரணமாக இயக்கச் செயல்பாடுகளுக்கு குறைந்த அளவே சக்தி தேவைப்படுவதால் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தவும், கரிமத் தடத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

Image
பொறுப்புடனான பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செயல்பாடுகள்

கழிவுகளைக் குறைத்தல் மற்றும் அதிகளவு வள ஆதாரங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மீது தீவிர கவனம் செலுத்தி செயல்படா நிலையிலுள்ள வாகனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முன்முயற்சிகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்

Image
நிலைத்தன்மையோடுடனான லாஜிஸ்டிக்ஸ் புரட்சி

பல்வேறு துறைகள் முழுவதும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் லாஜிஸ்டிக் நகர்வுகளுக்கான, வழங்கல் தொடர் முழுவதும் தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலான போக்குவரத்து செயல்பாடுகளை மேம்படுத்துதல், கரிம உமிழ்வைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எங்கள் அணுகுமுறையானது முன்னுரிமை அளிக்கிறது.

Image
பருவ நிலை குறித்த உணர்வுடன் கூடிய அணுகுமுறை

கரிம உமிழ்வைக் குறைத்து, ஒட்டுமொத்தமாக மாசற்ற சுற்றுச்சூழமைப்பைக் கொண்ட ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் மையமாக எங்கள் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகள் விளங்குகின்றன. நிலைத்தன்மையோடு கூடிய எங்கள் நடவடிக்கைகள் மூலம் எங்கள் நிறுவனங்களின் கரிம சமநிலைக்கான எங்கள் குறியிலக்கை , 2024க்குள் அடைவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.